« 2005-11 | HomePage | 2006-01 »

Saturday, December 31, 2005

PREMARITAL SEX...THE SITUATION in US

Recently I found a decent article on US sex patterns. I dont know if any such article/research on India is done before!?- Chella

Women's premarital sexual behavior has changed markedly in the last 50 years. During the 1940's, Kinsey, et al. (1948, 1953) found that about 10% of 17-year-old unmarried women and one-third of 25-year-old unmarried women had had intercourse. In the 1970's one-third of 13 to 15-year-olds and 50% of 17-year-old unmarried women and three-fourths of single college women had had intercourse and, moreover, 85% to 90% approve of premarital sex for themselves or others (Hunt, 1973, 1975; Hass, 1979, Playboy, 1976). A review of the 1988-90 General Social Survey also shows that a majority of American males have intercourse by 16-17, females by 17-18. Over 60% of 18 to 21-year-olds have had sex with more than one person. Premarital sex is increasingly common. Women who are better educated have more premarital sex, more sexual partners, masturbate more, and find oral sex more acceptable (Janus & Janus, 1993). Without doubt, we are getting sexually freer.

11:15 Posted in Sex | Permalink | Comments (0) | Email this

Saturday, December 24, 2005

Can blogs completely replace websites?

I stumbled upon an interesting discussion on webSites Vs Blogs. Reproducing some of them below....

 Blogs definately will not replace websites, because you can also put the script onto your website, and using a website is much more versatile than using a blog, you can personalize it and so on. A blog is an online diary, but a website, can integrate many things together.

Very true guys... Don't think it can replace Normal CMSs(Content management systems), since a lot of features are not there.. like forums ,etc. but wordpress is coming up with something in their next version have an inbuilt blog... atleast thats wat i've read.!

 Website could definately not be taken over by blogs - blogs are personal views of different topics, whereas websites often state information and product details etc. I think blogs will become more popular, but never take over websites.

 yeah tend to agree with everyone else here, blogs i see are more of a news script and like someone said above are more date based and sites are more content based. I think like people have said they will become integrated and then work in unison from then on

I too agree with the above views.... one thing is for sure. Bloggers know their limitations and less egoistic guys than some webmasters/authors!!LOL! --- Chella 

17:23 Posted in Web | Permalink | Comments (0) | Email this

Friday, December 02, 2005

Shame on UN, USA and the west !

Yesterday I have to see a movie called HOTEL RWANDA. It is a human tragedy that shows SELF DEFENCE is the only way to lead a honest life in this planet. This movie is also taken me back to the Eelam War days where Sinhalese Goondas killed thousands of innocent Tamils. No one could help them.

Please read the Eelam Writer Mr Vivekanandan's thought provoking comments on the film .....

ருண்ட கண்டம் என மேற்குலகால் அழைக்கப்படுகிற ஆபிரிக்கா. அதன் துயரங்களின் வருகையில் ருவாண்டா . நூறு நாட்களுக்குள் எட்டு லட்ச மக்கள் கொன்று குவிக்கப்பட்ட கொடுமை உலகின் ஊனக் கண்களுக்கு முன்பாகவே நடந்தேறியது.

மனித குலம் மற்றுமொரு தலைகுனிவை சந்தித்தது. ருவாண்டாவின் பிள்ளைகளின் அபயக் குரல் உலகப் பிரக்ஞையின் செவிப் பறைகளில் பயனற்று ஒலித்து ஓய்ந்தது.
விக்டோரியா ஏரியில் (குளம்) ருவாண்டா மக்களின் உதிரம் நிறைந்தது.

துட்சி இனமக்களை கொன்று அந்த புதைகுழிகளின் மேலே புல் பதித்து உதைபந்து விளையாடிய குட்டு வெறியர்களின் அட்டூழியம் அரங்கேறியது. உலகம் நித்திரை போல் பாவனை செய்தது. இந்தத் துயர் நிறைந்த வரலாற்றை ஆவணப்படுத்தி வெளிவந்திருக்கிறது HOTEL RWANDAஎன்கிற திரைப்படம்.


தொண்டைக்குழி வரை துயரம் முட்டி நிக்க வைத்திருக்கிற ஒரு திரைப்படம்.
மேற்குலகின் ஒவ்வொரு வீட்டின் வாசலையும் தாண்டி வந்து மன சாட்சியை உலுப்பியிருக்கிற ஒரு திரைப்படம் வந்து ருவாண்டாவின் சொல்லப்படாத சோகங்களை செதுக்கிவிட்டுப் போயிருக்கிறது.

ஆம்.Hotel Rwanda - Hollywood இன் மினுக்குகளை, ஒப்பனைகளைத் தாண்டி இன்னும் எஞ்சி இருக்கிற மனிதத்தின் ஈரத்தை இரந்து நிட்கிற ஓர் வரலாற்றுப் பதிவு.

பதட்டமான ஓர் சூழலில் செய்திகளை அறிகிற ஒரு அவசரத்தில் வானொலி அலைவருசைகள் தேடப் படும் பின்னணி ஒன்றுடன் படம் ஆரம்பமாகிறது.
குறிப்பிட்ட வானொலி நிலையத்தின் அலைவரிசை கிடைக்கிறது.

-'அன்பான குட்டு நேயர்களே ! எல்லாத் துட்சிகளையும் நான் ஏன் வெறுக்கிறேன் என யாரும் கேட்டால் எங்கள் வரலாற்றை வாசி என அவர்களுக்குச் சொல்வேன். இந்தத் துட்சிகள் பெல்ஜியக் காலனியாளர்களின் அடிவருடிகள்.எங்கள் குட்டு மண்ணை சூறை ஆடியவர்கள். கரப்பான் பூச்சிகள் கொலைகாரர்கள்.ருவாண்டா ,குட்டுக்களின் நிலம். நாம் பெரும்பான்மையர். அவர்களோ சிறுபான்மையர். வந்தேறு குடிகள் காட்டிக் கொடுக்கும் கயவர்கள். இந்த தொற்று நோயை வேரறுக்க உறுதி பூணுவோம்.இது குட்டு பவர் றேடியோ rtlm ! "

துவேசம் ஒப்பலிக்க வானலைகளில் பரவுகிறது விஷம். (இங்குள்ள வானோலிகள் நெடுஞ்சாலை போக்குவரத்து தொடர்பான நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் அறியத்தருகிற செய்தியைப்போல (traffic infos) இந்த குட்டு வானொலி துட்சிக்களின் மறைவிடங்கள், நடமாற்றங்கள் பற்றி உடனுக்குடன் குட்டு வெறியர்களுக்கு அறியத்தருவதன் மூலம் இந்த இனப்படுகொலையின் வழிகாட்டியாக இருந்தது. )

நமக்கும் இந்த படத்தின் கதைக்கும் இருக்கும் ஒற்றுமைகள் ஓங்கி அறைய இயல்பான ஈர்ப்பு எங்களுக்குள் வந்துவிடுகிறது.

கதை இதுதான்

நாயகன் பால் ரச செபகினா ஒரு குட்டு. துட்சி இன பெண்ணை காதலித்து கை பிடித்தவன்.கிகாலியிலுள்ள Hotel des milles collines இல் உதவி முகாமையாளர். அரச இயந்திரங்களின் கெடுபிடி, இராணுவ அடாவடிகளை லஞ்சம் கொடுத்தும்,"காக்கா பிடித்தும்' லாவகமாக கையாளும் சாணக்கியன்.

1994 இல் குட்டு அரசாங்கத்துக்கும் துட்சி கெரில்லாக்களுக்கும் இடையே ஐ.னா அநுசரனையுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றது. மிதவாதியான குட்டு ஐனாதிபதி துட்சிகளுக்கு அதிகமாக விட்டுக்கொடுப்பதாய் குட்டு தீவிரவாதிகள் முரண்பட ,குட்டு இராணுவம் "இன்தர் கம் வே" எனும் கூலிப்படை ரகசியமாய் பயிற்சிக்கொடுத்து சமாதானத்தைக் குழப்ப தயார் படுத்துகிறது. இறுதித் தீர்வில் கையெழுத்திட இருதரப்பும் தயாராகையில் ஐனாதிபதி செல்லும் விமானத்தை குட்டுக்கள் சுட்டு வீழ்த்தி பழியை துட்சிகள் மேல் போட முறுகல் முற்றுகிறது.

"நெட்டை மரங்களை எல்லாம் வெட்டித்தள்ளுங்கள்" என்ற சங்கேதக் குறியை குட்டு வானொலி அறிவிக்கவும் (துட்சிக்கள் உயரமானவர்கள்) இன அழிப்பு ஆரம்பமாகிறது
போலிடம் துட்சி அயலவர்கள் அபயம் கேட்டு வருகிறார்கள். நெருக்கடி நிலையால் கோட்டலின் முகாமைப் பதவி போலிடம் வரவே தனக்கிருந்த மேலிடத்துச் செல்வாக்காலும் கோட்டலின் பணபலத்தாலும் னவெறியர்களிடமிருந்து தனது உயிரையும் பணயம் வைத்து 1200 அபலைகளை காக்கின்ற ஒரு தனி மனிதனின் போராட்டமாய் கதை விரிகிறது.

ஐ.நா அமைதி காக்கும் படை, பிரெஞ்சு நாட்டுப் படை,உலகின் காவல் காரன் என மார் தட்டும் அமெரிக்கா,உலக மக்களின் மனசாட்சி எல்லாமே அவர்களை கைவிட்டுவிட.
தம்மை தாமே காப்பாற்றவேண்டிய சூழலில் ஒட்டு மொத்த மனிதத்துவத்தின் பிரதிநிதியாக போல் உயர்ந்து நிட்கிறான்.

போலின் கதை உண்மையாக நடந்த நிகழ்வு என்பதை வாசகர்கள் மனதில் கொள்க.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு சாட்டை அடியாய் சுழீரிடும் அனுபவம்.கத்திகளை மட்டுமே ஏந்திய ஒரு காடையர் கும்பல் மனிதர்களை வெட்டிச் சரிக்க ஐ.நா அமைதி காக்கும் படையினர் தானியங்கி ஆயுதங்களை வைத்தபடி
மரங்களாய் நின்ற கொடுமை உறைக்கிறது.

வானொலியிலே சோகம் பூசிய குரலில் அமெரிக்க அதிபர் பில் கிலின்றன் கூறுகிறார்: 'எம்மாளான எல்லா முயற்சிகளை மேற்கொண்டு எமது பிரஜைகள் 200 பேருடைய பாதுகாப்பையும் நாம் உறுதி படுத்துவோம்". மீண்டும் உறைக்கிறது நமக்கு.
கோட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளை மீட்க பிரெஞ்சு படையணி வந்திறங்கவும்,அகதிகள் தமக்கு பாதுகாப்பு வந்ததென மகிழ்கிறார்கள்.
அவர்கள் தம்மை பாதுகாக்க வரவில்லை என அறிகிற போது அம் மக்களின் முகங்களில் பரவும் துயரம் உறைக்கிறது.
ஐ.நா அமைதிப் படை பொறுப்பதிகாரி உலக நாடுகளை தலையிடச் சொல்லி மனுவுக்கு மேல் மனு கொடுத்தும் மறுக்கப்பட்ட ஆத்திரத்தில் கொப்பொலிக்கிற வார்த்தைகள் உறைக்கின்ற சத்திய வசனங்கள் அவர் போலிடம் சொல்கிறார் 'நீ என் முகத்தில் காறி துப்ப வேண்டும் போல் எனக்கு வெட்கமாக இருக்கிறது,நீங்கள் அழுக்குகள் என நாம் கருதுகிறோம்"
அப்போது போல் இடைமறித்து "யார் அந்த நாம்" என்று கேட்கிறார்.

"மேற்குலகம் ,அமெரிக்க வல்லரசு, நீ நம்பியிருக்கிற எல்லாமும் போல். நீங்கள் செல்லாக்காசு, நீங்கள் கறுப்பர்கள்,நீங்கள் நிகர்கள் கூட இல்லை நீங்கள் ஆபிரிக்கர்கள். இந்தப் படுகொலையை நிறுத்த யாரும் எந்த முயற்சியையும் எடுக்கப்போவதில்லை."

கையறு நிலையில் வெடிக்கும் அவ்வார்த்தைகளின் வெப்பம் உறைக்கிறது. இனப்படுகொலைக்காளாகும் அந்த மக்கள் மேற்குலகின் நியாயதர்மங்கள் மீது வைத்த நம்பிக்கை தவுடு பொடியாகிறது. உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது, சர்வதேச ஊடகங்கள் அவதானிக்கின்றன,ஐ.நா அமைதிப்படையணி இருக்கின்றது, பிரெஞ்சு நாட்டு படை வீரர்கள் இருக்கிறார்கள், எமக்கு இத்தனை அரண்ங்கள் காப்பாக உள்ளன என நினைத்த ருவாண்டா மக்கள் வெட்ட வெளியில் நிர்க்கதியாய் நாம் நிற்கின்றோம் என்ற நிஐம் அறிகையில் இடிந்து போகிறார்கள்.

செஞ்சுலுவைச் சங்கப் பிரதிநிதி மடம் ஆர்ச்சர் ஓர் அநாதை இல்லத்தின் குழந்தைகளை மீட்க சென்றபோது அங்கே காடையர்கள் குழந்தைகளை வெட்டிச் சாய்க்கத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் படுகொலைகளை ஆர்ச்சர் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். மடம் ஆர்ச்சர் கண்ணீர் மல்க விபரிக்கும் காட்சியின் போது எமக்குள் வலி ஊடுருபும். ஒரு சிறுமி தனது முதுகில் குழந்தைச் சகோதரியை மூட்டைக் கட்டி சுமந்தபடி ,வெட்ட தரும் காடையர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றுமாறு மடம் ஆர்ச்சரிடம் மன்றாடுகின்றார்.

"அய்யோ அவர்களை வெட்ட வேண்டாம் என்று சொல்லுங்கள் நான் இனிமேல் துட்சியாக இருக்கமாட்டேன் என்று சொல்லுங்கள்". இதயம் உள்ள எந்த மனிதனையும் கட்டிப்போடும் இந்த வார்த்தைகள் அந்த மிருகங்களை கட்டிப்போடவில்லை.

இந்தப் படம் தந்த அனுபவங்களின் பின்னணியில் ஆபிரிக்க மக்களின் அழிவை மேற்கு நாடுகள் மறைமுகமாக ஆதரிக்கிறன்றனவா என்ற கேள்வி எழுகின்றது. குட்டு இராணுவத்திற்கு ஆயுதங்கள் வினயோகம் செய்கிற பிரெஞ்சு அரசாங்கம் நினைத்திருந்தால் ஒரு தொலைபேசி அழைப்புடன் பதட்டத்தை தனித்திருக்க முடியும். ஐ நா அமைதிப் படையின் பலம் மற்றும் பலவீனம்.

இங்கு கேள்விக்குள்ளாகிறது. சுடானின் டார்வுரில் நடந்தேறுகின்ற படுகொலைகளை நிறுத்த ஐ.நாவும் ஐரோப்பிய பொருளாதார சமூகமும் அமெரிக்காவும் எடுக்கும் நடவடிக்கைகள் நத்தை வேகத்தில் நகர்கின்ற பகைபுலத்தில் பார்த்தாள் ருவாண்டா படுகொலைள் தடுக்கப்படாததன் காரணம் தெளியும். மேற்கு நாடுகள் ஆபத்தில் கால் வைக்கும் முன் தமக்கு வரும்; லாபத்தையே கணக்குப்பண்ணுகின்றனர். சோமேலியாவில் 16 இராணுவத்தை பறி கொடுத்ததும் அமெரிக்கா வெளியேறுகிறது. ஆனால் ஈராக்கில் ஆயிரக்கணக்கான படைகளை பலிகொடுதுதும் வெளியேறமறுக்கிறது.

இந்த இரட்டை விதமான போக்கு ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. ஆக மொத்தத்தில் ருவண்டாவின் ஒரு மிலியன் மக்கள் தம் உயிர்கொடுத்து மீண்டும் நிரூபித்திருக்கும் உண்மை மேற்கு நாடுகளில் தலையீடு என்பது நியாயதர்மங்களுக்காக அல்ல பொருளாதார இராணுவ நலங்களுக்காகவே என்பதாகும்.

தா.விவேகானந்தன்
நன்றி: புலிகளின் குரல்

 

All the posts